Categories
சினிமா தமிழ் சினிமா

விஸ்வரூபம் எடுக்கும் இந்தி திணிப்பு எதிர்ப்பு…. ஏ ஆர் ரகுமானின் சூப்பர் பதிலடி…. வைரலாகும் புகைப்படம்….!!!!!!

நாடாளுமன்ற அலுவல் மொழி கமிட்டியின் 37வது கூட்டம் அதன் தலைவரும், உள்துறை மந்திரியுமான அமித்ஷா  தலைமையில் நடைபெற்றது. இதில் துணை தலைவர் அழகிரி மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில்  அமித்ஷா பேசியது மிகப்பெரிய சர்ச்சையை எழுப்பியுள்ளது. நாட்டின் ஒற்றுமையின்  முக்கிய அங்கமாக அலுவல் மொழியை உருவாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

பிற மொழிகளைப் பேசும் மாநில குடிமக்கள் தங்களுக்குள்ளே உரையாடும் மொழி இந்திய மொழியாகவே இருக்க வேண்டும். மேலும் இந்தியை  ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும் என கூறியிருந்தார். அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு தென்னிந்தியாவின் மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்தி திணிப்பை ஒருபோதும் தமிழகம் ஏற்க்காது  என அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து இருக்கின்றனர். ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை  பயன்படுத்துங்கள் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் கூறுவது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல். ஒரே தவறைத் திரும்பத் திரும்ப செய்கிறீர்கள்.

 

 

 

ஆனால் அதில் நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள் என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் புரட்சிக்கவிஞர், பாரதிதாசன் எழுதிய தமிழுக்கும் அமுதென்று பெயர் என்ற கவிதையில் வரும் ‘இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு நேர்’ என்ற வரிகளை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவாக பகிர்ந்திருக்கிறார்.

ழகரம் ஏந்திய தமிழணங்கு என்ற வார்த்தைகளை தாங்கிய போட்டோவில், ‘ழ’ கரத்தை தங்கிய பெண் தாண்டவமாட, கீழே ‘தமிழணங்கு’ என்றும்,  புரட்சி  கவிஞரின் பாடல் வரிகளும் அதில் இடம் பெற்றிருக்கிறது. இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது. இந்தி திணிப்பிற்கு  எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஏ ஆர் ரகுமான் இதனை பகிர்ந்துள்ளதாக இணையவாசிகள் கொண்டாடி வருகிறார்கள்.

Categories

Tech |