Categories
தேசிய செய்திகள்

விஸ்மயா வழக்கு: கணவர் குற்றவாளி…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

நாட்டில் வரதட்சணை கொடுமை என்பது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. அதனால் இதுவரை பல பெண்கள் உயிரிழந்துள்ளனர். அதன்படி சமீபத்தில் வரதட்சணை கொடுமை காரணமாக விஸ்மயா என்பவர் தற்கொலை செய்து கொண்டார். கேரளாவை உலுக்கிய விஸ்மயா தற்கொலை வழக்கில் அவருடைய கணவர் கிரண்குமார் குற்றவாளி என கொல்லம் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரதட்சணை கொடுமை காரணமாக விஸ்மயா (22) என்ற பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிந்த நிலையில் கணவர் குற்றவாளி என்பதை நீதிமன்றம் உறுதி செய்து தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

Categories

Tech |