சபரிமலையில் நடைபெற்ற சித்திரைவிஷூ கனி தரிசனத்தில் பெரும்பாலான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சித்திரை விஷூ திருவிழாவிற்காக சபரிமலை நடை ஏப்ரல் 10 மாலை வேளையில் திறக்கப்பட்டது. இதையடுத்து ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் வழக்கமான பூஜைகள், உதயாஸ்தமன பூஜைகள், படி பூஜையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சித்திரை விஷூ நேற்று கொண்டாடப்பட்டது. இதற்காக நேற்றுமுன்தினம் இரவு ஐயப்பன் விக்ரகம் முன்பு மலர்கள், காய் கனிகளால் அலங்கரிக்கப்பட்டு நடை அடைக்கப்பட்டது.
அதன்பின் நேற்று அதிகாலை 4.00 மணிக்கு நடை திறந்தவுடன் கனிதரிசனமானது நடைபெற்றது. அடுத்ததாக தேவசம் போர்டு நிர்வாகிகள், பக்தர்கள் கனிதரிசனம் நடத்திய பிறகு தந்திர கண்டரரு மகேஷ்மோகனரரு, மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி பக்தர்களுக்கு நாணயங்களை கைநீட்டம் வழங்கினர். நேற்றுஅதிகாலை முதல் சபரிமலையில் பெரும்பாலான பக்தர்கள் குவிந்தனர். அதனை தொடர்ந்து பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து 18 படிகளில் ஏறிசென்று தரிசனம் செய்தனர். பின் வரும் 18 ஆம் தேதி இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.