Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

விஷால் நடிக்கும் “லத்தி”… வெளியாகிய படத்தின் அப்டேட்…!!!

விஷால் நடிக்கும் “லத்தி” திரைப்படத்தை பற்றிய அப்டேட் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகரான விஷால் தற்போது அறிமுக இயக்குனர் வினோத் இயக்கத்தில் “லத்தி” திரைப்படத்தில் நடித்து வருகின்றார். சுனைனா ஹீரோயினாக நடிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ராணா தயாரிப்பு நிறுவனம் படத்தை தயாரிக்கின்றது. அண்மையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிய நிலையில் தற்போது படத்தைப் பற்றிய தகவல் கிடைத்திருக்கிறது.

காவலர் கதாபாத்திரத்தில் விஷால் இந்த படத்தில் நடிக்கின்றார். ஒரு காவலர் தனது பத்து வயது மகளுடன் எதிரிகளால் சூழப்பட்ட இக்கட்டான கட்டத்தில் மாட்டிக்கொண்டு ஆபத்திலிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதே கதையாம். ஆகையால் இந்த படத்தில் விஷால் சற்று வயதான தோற்றத்தில் இருப்பார் என சொல்லப்படுகின்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகின்ற நிலையில் விரைவில் படப்பிடிப்புகள் முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |