விஷால், ஆர்யா இணைந்து நடிக்கும் எனிமி படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் விஷால், ஆர்யா இருவரும் இணைந்து நடித்து வரும் திரைப்படம் எனிமி. இந்த படத்தை அரிமா நம்பி, இருமுகன் போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தில் மிருணாளினி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
ஏற்கனவே இந்த படத்தில் நடிகர் ஆர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட்டு விட்டன. இந்நிலையில் வருகிற ஜூலை 9-ஆம் தேதி எனிமி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது து.ப.சரவணன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் தான் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.