Categories
சினிமா தமிழ் சினிமா

விஷால், ஆர்யாவின் ‘எனிமி’… மரண மாஸ் அப்டேட்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

விஷால், ஆர்யா இருவரும் இணைந்து நடித்துள்ள எனிமி படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் விஷால், ஆர்யா இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் எனிமி . இந்த படத்தை இருமுகன், அரிமா நம்பி போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த ஆனந்த் ஷங்கர் இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ், மிருணாளினி, கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் . விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் விஷால் எனிமி படத்தின் முக்கிய அப்டேட்டை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் . அதில் எனிமி படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக  நிறைவடைந்துள்ளது என்றும் விரைவில் இந்த படத்தின் டீஸர் வெளியாகும் என்றும்  தெரிவித்துள்ளார். மேலும் கடைசி நாள் படப்பிடிப்பின்போது படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது .

Categories

Tech |