விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளார்.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். விஷாலின் 33-வது திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார். இந்த படத்திற்கு மார்க் ஆண்டனி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக மிரட்டுகின்றார். இந்த படத்தை மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கின்றது.
தமிழில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ரித்து வர்மா இத்திரைப்படத்தில் நாயகியாக நடிக்கின்றார். இப்படத்தில் எழுபதுகளில் இருந்தது போல சென்னை மவுண்ட் ரோடு செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகின்றது. இதனால் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
இந்நிலையில் இத்திரைப்படம் குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா ஜாக்கி பாண்டியன் என்ற வேடத்தில் நடிக்கின்றார். இதற்கான போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார் எஸ்.ஜே.சூர்யா. இந்த போஸ்டரானது தற்பொழுது ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகின்றது.
#JackiePandian From #MarkAntony 🥰🙏💐 pic.twitter.com/23Kwh5u5Ou
— S J Suryah (@iam_SJSuryah) October 5, 2022