விஷால் நடிப்பில் உருவாகி வரும் வீரமே வாகை சூடும் படத்தின் ஷூட்டிங் அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான சக்ரா படம் ரசிகர்களிடையே சுமாரான வரவேற்பை பெற்றது. தற்போது இவர் நடிப்பில் எனிமி, வீரமே வாகை சூடும் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதில் வீரமே வாகை சூடும் படத்தை அறிமுக இயக்குனர் து.பா.சரவணன் இயக்குகிறார். இந்த படத்தில் டிம்பிள் ஹயாதி கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, பாரதிகண்ணம்மா சீரியல் பிரபலம் அகிலன், ரவீனா ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
Final Schedule of #VVS & #Saamanyudu Starts Today !!!#VVSFromDecember#VeerameVaagaiSoodum#SaamanyuduFromDecember pic.twitter.com/7Yrhds76De
— Vishal (@VishalKOfficial) September 14, 2021
விஷாலின் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் வீரமே வாகை சூடும் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நேற்று தொடங்கப்பட்டுள்ளதாக விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் . விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.