நடிகர் விஷாலின் மார்க்கெட் சரிவின் காரணத்தை பிரபலம் ஒருவர் வெளிப்படையாக கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான செல்லமே படத்தின் கதாநாயகனாக அறிமுகமானவர் விஷால். இதைத்தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான திமிரு, சண்டக்கோழி, தாமிரபரணி, சத்யம் உள்ளிட்ட பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. மேலும் இவர் நடிப்பில் வெளியான இரும்புத்திரை படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
ஆனால் இதன் பின் விஷால் நடிப்பில் வெளியான சண்டைக்கோழி 2, அயோக்யா, ஆக்ஷன், சக்ரா ஆகிய படங்கள் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் தயாரிப்பாளரும் இயக்குனருமான சீதா லட்சுமணன் பேட்டி ஒன்றில் விஷாலின் இந்த தொடர் தோல்வி தான் அவரது மார்க்கெட் சரிவுக்குக் காரணம் என வெளிப்படையாக கூறியுள்ளார் . தற்போது நடிகர் விஷால் எனிமி, விஷால் 31 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.