லத்தி திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இவர் அடுத்ததாக ‘மார்க் ஆண்டனி’ படத்தில் நடிக்கிறார். மேலும் ‘துப்பரிவாளன் 2’ திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார். இதனையடுத்து, தற்போது இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் ”லத்தி”.
ராணா புரோடக்சன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில், இந்த படத்தின் முதல் பாடலான” தோட்டா லோட் ஆகி வெயிட்டிங்” வெளியாகியுள்ளது. இந்த பாடலை துறை என்பவர் வரிகளை எழுத யுவன் சங்கர் ராஜா, விக்கி உள்ளிட்டோர் இணைந்து பாடியுள்ளார்கள். இந்தப் பாடல் வீடியோவானது தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.