Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“விஷம் வச்சி கொன்னுட்டாங்க” பசுக்களை பார்த்து கதறிய பெண்…. போலீஸ் விசாரணை…!!

2 பசுக்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக பெண் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடுகபட்டியில் கலைச்செல்வி என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது தோட்டத்தில் 4 பசுக்களை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் கலைச்செல்வி தனது பசுக்களுக்கு கழனி தண்ணீர் சேகரிப்பதற்காக ஊரின் ஒரு பகுதியில் குடத்தை வைத்து செல்வது வழக்கம். அந்த குடத்தில் பொதுமக்கள் கழனி தண்ணீரை ஊற்றி செல்வர். இந்நிலையில் பொதுமக்கள் ஊற்றிய கழனி தண்ணீரை எடுத்து வந்து கலைச்செல்வி தனது பசுக்களுக்கு வைத்துள்ளார். அதனை குடித்த இரண்டு பசுக்களும் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து இறந்துவிட்டது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கலைச்செல்வி கதறி அழுதார். இது குறித்து கலைச்செல்வி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் முன்விரோதம் காரணமாக அதே பகுதியில் வசிக்கும் சிலர் கழனி தண்ணீரில் விஷத்தை வைத்து கொலை செய்ததாக குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |