மறைந்த நடிகர் விவேக் குறித்து பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடெலா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் .
தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் விவேக் கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருக்கு பிரபலங்களும், ரசிகர்களும், கலைஞர்களும் இரங்கல் தெரிவித்தனர். நடிகர் விவேக் ரஜினி, விஜய், அஜித், விக்ரம் போன்ற பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து படங்களில் நடித்துள்ளார். சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் கதாநாயகனாக நடித்து வரும் படத்தில் தான் நடிகர் விவேக் கடைசியாக நடித்துள்ளார் . இந்த படத்தை லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரப் படங்களை எடுத்து வரும் இயக்குனர்கள் ஜேடி, ஜெர்ரி இருவரும் இயக்கி வருகின்றனர்.
I will miss you forever my Padma Shri @actorvivekh sir 😞 My experience of working with a legend like you in my debut tamil film is unforgettable. I’m so shocked by the loss. You cared for me & cared for the world. Your comic timing & dialogues. Your love for the trees 🌲.😞 pic.twitter.com/3K2l86vvvF
— URVASHI RAUTELA🇮🇳 (@UrvashiRautela) April 18, 2021
இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடெலா கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஊர்வசி ரௌடெலா தனது சமூக வலைதளப் பக்கத்தில் மறைந்த நடிகர் விவேக் குறித்து பதிவிட்டுள்ளார். அதில் ‘உங்களை ரொம்ப நான் மிஸ் பண்ணுவேன் பத்மஸ்ரீ விவேக் சார் . எனது முதல் தமிழ் படத்திலேயே உங்களைப்போன்ற லெஜெண்டுடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். நான் இந்த இழப்பால் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். உங்கள் காமெடி டைமிங், உரையாடல்கள், மரங்களின் மீதான உங்களின் அன்பு மறக்க முடியாதது’ என பதிவிட்டுள்ளார்.