சீனாவில் விவாகரத்து கேட்ட கணவரிடம் மனைவி செய்த வேலைக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
சீனாவில் கடந்த 2015 ஆம் ஆண்டில் சென் என்ற நபர் வேங் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் இருவரும் சீனாவில் தலைநகரமான பெய்ஜிங் நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி, வழக்குப்பதிவு செய்தனர். இந்த விவாதத்தில் வேங்கிற்கு விருப்பமில்லை. முதலில் அவர் தயங்கினார். அதன் பின்னர் தனக்கு பொருளாதார ரீதியாக உதவி வேண்டும் என்று மனதில் எண்ணிக் கொண்டு விவாகரத்திற்கு ஒப்புக்கொண்டார்.
அதன் பிறகு எங்களுக்கு திருமணம் ஆன நாட்களிலிருந்து சென் தனக்கு ஒரு நாள் கூட வீட்டு வேலைகளிலும் மகனைப் பார்த்துக் கொள்வதிலும் எந்த ஒரு உதவியும் செய்ததில்லை என்று கோரி வாதாடினார். இதனைகேட்ட தலைமை நீதிபதி வேங்கிர்க்கு மாதந்தோறும் ஜீவனாம்சமாக 2 ஆயிரம் யுவான் கொடுக்க வேண்டும் என்றும் இதற்கு முன்பு செய்த வீட்டு வேலைக்கு மொத்தமாக 50 ஆயிரம் யுவான் கொடுக்க வேண்டும் என்றும் நிபந்தனை கோரி தீர்ப்பளித்து பின்னர் அவர்களுக்கு விவாகரத்து கொடுத்தார்.
இதுகுறித்து தலைமை நீதிபதி திருமணத்திற்குப் பிறகு ஒரு தம்பதியினருக்கு இருக்கும் சொத்துக்கள் அனைத்தையுமே இரண்டாகபிரித்து கொள்ளலாம் என்றார். இதுபோன்ற கணக்கிடப்படாத வேலைகளும் மதிப்பு பெரும் சொத்துக்களே என்றும் அவர் கூறியுள்ளார். இது ஒரு வித்தியாசமான தீர்ப்பாக உள்ளது என சமூக ஊடங்களில் விவாதப் பொருளாகி உள்ளது. இத்தீர்ப்பு வெளிவந்த சில மணி நேரங்களிலேயே இது சமூக வலைதளங்களில் பரவி உள்ளது.
பின்னர் இத்தீர்ப்பு அனைவரிடமும் அதிக கவனத்தை செலுத்தியது.இதில் அவர்கள் கூறுகையில் இந்த 50 ஆயிரம் யுவான் என்பது மிகக் குறைவு என்றும் வேலைக்குச் செல்லும் பெண்களே ஒரு வருடத்தில் 50 ஆயிரத்திற்கும் அதிகமாக ஊதியம் பெறுகிறார்கள் என்றும் கூறியுள்ளார். மேலும் பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றனர்.
இந்நிலையில் சீனாவில் இந்த ஆண்டு புதிய சட்டம் ஒன்று இயற்றப்பட்டது.இச்சட்டத்தில் விவாகரத்து பெறுபவர்களில் யாரேனும் ஒருவர் குழந்தை வளர்ப்பு முதியவர்களை பார்த்துக் கொள்ளுத லும் அவர்களுடைய துணையின் மற்றும் அதிக பங்கெடுப்பு இருந்தால் அவர்களுக்கு இழப்பீடு பெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அப்பொழுது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு தகவல் வெளியிட்டுள்ள தகவலின்படி சீனப்பெண் ஒரு நாளில் அதிக பட்சம் 4 மணி நேரம் வீட்டு வேலைகளில் ஈடுபடுகிறார்கள் எனவும் இது சீன ஆண்களை விட பெண்கள் 2.5 மடங்கு அதிகமான ஊதியமில்லா வேலைகளில் ஈடுபடுவதை காட்டுகிறது எனவும் மற்ற பெண்கள் ஆண்களை விட இரண்டு மடங்கு ஊதியமில்லா வேலைகளில் ஈடுபடுகின்றன எனவும் கூறியுள்ளார்.