நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும் கடந்த 2014 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் அவர்களுக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் பிரிய போவதாக தங்கள் சமூக வலைதளங்களில் அறிவித்தனர். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுகுறித்து நாகார்ஜுனா மற்றும் நாகசைதன்யா இருவரும் பேசியுள்ளனர்.
இதுகுறித்து நாக சைதன்யா கூறியதாவது, “மீடியாக்கள் எங்களைப் பற்றியும் எங்கள் விவாகரத்தை பற்றியும் எழுதுகிறார்கள். எழுத வேண்டியது அவர்கள் கடமை தான். அதை நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. எங்களைப் பற்றி பரபரப்பாக பேசப்படுகிறது. இது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது பரவாயில்லை பேசுபவர்கள் பேசட்டும் நாளை வேறு ஒரு கதை வந்தால் இதை மறந்துவிட்டு அதை பேசத் தொடங்கிவிடுவார்கள் .!” எனக் கூறியுள்ளார் .இதுகுறித்து நாகார்ஜுனா கூறுகையில், “எங்களைப்பற்றி அப்படி இப்படி என மீடியாக்கள் எழுதுவது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. என்னை பற்றி எழுதுங்கள் எனக்கு கவலை இல்லை என் குடும்பத்தை பற்றி இவ்வாறு எழுதுவது சற்று வருத்தம் அளிக்கிறது. என்றென்றும் எங்களுடைய மகன்தான்.” என நாகார்ஜுனா கூறியுள்ளார்.