தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. அடுத்தடுத்து இருமொழி படங்களிலும் நடிக்கவுள்ள சமந்தா ஹாலிவுட் படத்திலும் நடிக்கவுள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா தி ரைஸ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். அந்தப்பாடல் சமந்தாவின் கேரியரை மேலும் உயர்த்தி விட்டது.
உலகமெங்கும் பிரபலமடைந்த அந்த பாடல் 100 மில்லியனுக்கும் மேற்பட்ட வியூஸ்களை குவித்து நம்பர் ஒன் பாடலாக சாதனை படைத்துள்ளது. இதனையடுத்து சமந்தா மன உளைச்சல் குறித்து ஒரு பேட்டியில் கூறியிருந்தார் அதாவது அவர் நண்பர்களுடன் நேரத்தை செலவிட்டு தனது மன உளைச்சலைப் போக்கி கொள்வாராம். நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் இருவரும் சுமூகமாக பிரிவதாக சமூக வலைதளங்களில் அறிவித்தனர். இதையடுத்து தீவிர மன அழுத்தத்திற்கு ஆளான சமந்தா வட இந்தியாவின் ரிஷிகேஷ் , இமய மலை உட்பட பல இடங்களுக்கு தோழிகளுடன் ஆன்மிக சுற்றுலா சென்றார். பின்னர் தனது தோழிகளுடன் கோவாவிலும் சென்று மன நிம்மதியை தேடி உள்ளதாக கூறியுள்ளார்.