நடிகை சமந்தாவும் நாக சைதன்யாவும் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்தனர். இதனையடுத்து திருமண வாழ்க்கையில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த வருடம் இருவரும் விவகாரத்தை அறிவித்தனர். இதனைதொடர்ந்து சமந்தா திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்த நிலையில் காஃபி வித் கரன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நாக சைதன்யா “டைவர்சுக்குப் பின் எனது வாழ்க்கை தற்போது நிறையவே மாறியுள்ளது. முன்பு மனம் திறந்து நிறைய பேச முடியாது. இப்போது புதிய மனிதனாக இருக்கிறேன்” என்றார். அதற்கு முன்பு இதே நிகழ்ச்சியில் பங்கேற்ற சமந்தாவிடம் கரன் ஜோஹர், “உங்கள் கணவர் நாக சைதன்யா” எனக் கூற அவரை நிறுத்தி திருத்தி “என் முன்னாள் கணவர் என்று கூறுங்கள்” என சமந்தா கூறியது குறிப்பிடத்தக்கது.