Categories
மாநில செய்திகள்

விவசாய விளைபொருள் மசோதா சொல்வதும் சந்தேகமும்..!

விவசாயத்தில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும் மூன்று வேளாண் மசோதாக்களும் விவசாயிகளின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை உண்டாக்கும் என்று மத்திய அரசு வர்ணிக்கிறது. ஆனால் அவை தங்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கிவிடுமோ என்று விவசாயிகள் அஞ்சுகின்றனர்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா விவசாயிகள் தங்களது விளைபொருட்களை யாரிடம் வேண்டுமானாலும் விற்க வழிவகை செய்கிறது. இதன் எதிரொலியாக எதிர்காகத்தில் கமிஷன் மண்டிகளே இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. ஆன்லைன் வழியாக விளைபொருட்களை விற்பதற்கான வசதிகளை உருவாக்க வழி செய்கிறது. அதனால் மண்டிகளே  இல்லாமல் போய்விடும் நிலையில் அதன் அடிப்படையில் நடக்கும் ஆன்லைன் வர்த்தகம் நடைமுறையில் சாத்தியம் ஆவது எப்படி என்ற கேள்வி எழுகிறது. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு விவசாயிகள் தானியங்களை பயிரிட வகை செய்கிறது. இதன் மூலம் விளைபொருட்களுக்கு முன்கூட்டியே விலை நிர்ணயிக்கப்பட்டுவிடும். ஆனால் விவசாயம் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட கூடியது.

இந்தநிலையில் எதிர்காலத்தில் பிரச்சனை ஏற்பட்டால் தனியார் நிறுவனங்களின் கையே ஓங்கி இருக்கும் என்பது விவசாயிகளின் அச்சம். தனியார் நிறுவனங்கள் 5 ஏக்கருக்கும் அதிக நிலம் கொண்ட பெரு விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்பும் என்பதே நிதர்சனம். அப்படி என்றால் இந்தியாவில் 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் கொண்ட சிறு குறு விவசாயிகளே 86 சதவீதம் இருக்கும் நிலையில் அவர்களின் கதி என்னவாகும் என்பது இன்னொரு அச்சம். இதேபோல் தனியார் நிறுவனங்களுடன் ஆன ஒப்பந்தத்தில் பிரச்சனை ஏற்படும் போது சிறு விவசாயிகளால் அவர்களை எதிர்கொள்ள முடியுமா என்ற அச்சமும் நிலவுகிறது. அத்தியாவசிய பொருட்கள் சட்ட திருத்த மசோதா வெங்காயம், உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள் போன்றவற்றை சேமித்துவைப்பதற்கான உச்சவரம்பை நீக்குகிறது.

Karnataka: Farmers in tears as Tur prices crash

இதன் மூலம் தனியார் நிறுவனங்கள் விவசாயிகளிடமிருந்து விளைபொருட்களை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து அதிக அளவில் இருப்பு வைத்துக் கொள்வார்கள். புதிய மகசூலைப் குறைந்த விலைக்கு விற்குமாறு விவசாயிகள் நிர்பந்திக்கும் சூழல் உருவாகலாம். விளைபொருட்களின் சந்தை விலையை நிர்ணயிப்பதில் அரசு நிர்ணயித்துள்ள உச்சவரம்பு மிகவும் அதிகமாக இருக்கிறது. இந்த நிலையை எட்டும் சூழல் ஒருபோதும் உருவாகாது என்று சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். இதேபோல் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் மசோதாக்களிலும் விலைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதை உறுதிப்படுத்தும் அம்சங்கள் இல்லை என்றும் விவசாயிகள் கருதுகின்றனர். மத்திய அரசின் எதிர்பார்ப்புக்கு மாறாக வேளாண் வர்த்தகத்தில் தனியார் நிறுவனங்களின் கை ஓங்கி விவசாயிகளின் எதிர்காலமே கேள்விக் குறியாகிவிடக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

Categories

Tech |