Categories
தேசிய செய்திகள்

விவசாய பணிக்கு…..”ரூ 30,00,00,000 க்கு” ஹெலிகாப்டர்….! மிரள வைத்த இந்திய விவசாயி

விவசாயி  ஒருவர் பால் விற்பனைக்கு ஹெலிகாப்டர் வாங்கி அனைவரையும்  ஆச்சரியபடுத்தியுள்ளார்.

மஹாராஷ்டிரா மாநிலம் பிவாண்டி பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன்  போரி.இவர் கறவை மாடுகளை வைத்து பால் வியாபாரம், விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற தொழில்களையும் செய்து வருகிறார். இவர் பால் விற்பனைக்கு பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா, குஜராத் போன்ற மாநிலங்களுக்கு அடிக்கடி சென்று வியாபாரம் செய்து வருகிறார். 

மேலும், அவர் வியாபாரத்திற்கு பிற மாநிலங்களுக்கு சென்று வர காலதாமதம் ஆவதால் அவர் சொந்தமாக 30  கோடி மதிப்புள்ள   ஒரு ஹெலிகாப்டர் வாங்கியுள்ளார். இதனை தொடந்து அவர் ஹெலிபேட் மற்றும் பைலட் அறை  கட்டுவதற்கு இரண்டரை ஏக்கர் நிலப்பரப்பில் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். இந்த செயல்  அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

Categories

Tech |