Categories
மாவட்ட செய்திகள்

விவசாய தொழில்நுட்பம்…. “அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்துறை மாணவர்களுக்கு பயிற்சி”….!!!!!!

அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் துறை மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் அருகே ஆனைக்காரன் சத்திரம் ஊராட்சி அனுமந்தபுரம் கிராமத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் துறை இறுதியாண்டு மாணவ-மாணவிகளுக்கு சம்பா சாகுபடி நெல் ரகங்கள் குறித்தும், சாகுபடி செய்யும் தொழில்நுட்பம் குறித்தும் பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சிக்கு சத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ் தலைமை தாங்க கொள்ளிடம் வேளாண்மை உதவி இயக்குனர் எழில்ராஜா, விரிவாக்கதுரை பேராசிரியர் சக்திவேல் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள்.

மேலும் இதில் வேளாண்மை விரிவாக்கத் துறை பேராசிரியர் சண்முகராஜா பங்கேற்று பேசியதாவது, விவசாயிகள் அரசின் நலத்திட்டங்களை தெரிந்து கொள்ளும் வகையில் உழவன் செயலி என்ற இணையதளத்தை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என கூறினார். மேலும் இதில் விவசாயிகள், பேராசிரியர்கள், ஊராட்சி உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.

Categories

Tech |