விவசாய கடன் ரத்து, பெட்ரோல் விலை குறைப்பு என்ற மகிழ்ச்சியான அறிவிப்புகளை இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் மக்கள் மீண்டும் போராட்டம் நடத்திய நிலையில், அந்நாட்டின் அதிபர் கோத்தப்பைய ராஜபக்சே கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்தார். பல அமைச்சர்களும் தங்களது பதவியை துறந்ததால் வேறு வழி இன்றி ரணில் விக்ரமசிங்கே பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து நாட்டின் இடைகால அதிபராக ரணில் விக்ரமசிங்கே நியமித்துவிட்டு, சிங்கப்பூரில் அடைக்கலம் புகுந்துள்ளார்.
கோத்தபய ராஜபக்சே இடைக்கால அதிபராக பொறுப்பேற்ற முதல் வேலையாக நாட்டின் அவசர நிலையை அமல்படுத்தியுள்ளார். இந்த பிரகடனம் நீடிக்கப்படுவதாக ரணில் இன்று அறிவித்தார். வரும் ஜூலை 20 தேதி அதிபர் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அவசரநிலை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மக்களை தற்போது அமைதிப்படுத்தும் வகையில் இந்த சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் இரண்டு ஏக்கருக்கு குறையாக நிலம் வைத்துள்ளவர்களின் விவசாய கடன்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். மேலும் பெட்ரோல் விலை குறைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது தொடர்ந்து பெட்ரோல் விலை குறைக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.