Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

விவசாயி மீது அடையாளம் தெரியாத நபர்கள் கொலைவெறித் தாக்குதல் …!!

சங்கரன் கோவில் அருகே அடையாளம் தெரியாத நபர்களால் சரமாரியாக வெட்டப்பட்ட விவசாயத்துறை ராஜ் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே உள்ள கங்கானே கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி துரைராஜ் இவருக்கும், இவரிடம் பால் எடுத்துச் செல்லும் நபர்களுக்கும் இடையே ஏற்கனவே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் அடையாளம் தெரியாத கும்பல் துரைராஜை சரமாரியாக வெட்டி அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியது.

இதில் படுகாயமடைந்த துரைராஜ் உயிருக்கு ஆபத்தான நிலையில் சங்கரன் கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர்களை காவல்துறை தேடி வருகிறது.

Categories

Tech |