Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

விவசாயி கொலை வழக்கு…. 4 பேருக்கு ஆயுள் தண்டனை…. கோர்ட் அதிரடி தீர்ப்பு….!!!!

தமிழகத்தில் கொலை, கொலை முயற்சி,கொள்ளை சம்பவம் தற்போது அதிகரித்து வருகிறது.. அதாவது, மக்கள் சொத்துகாகவும்,  நிலத்திற்காகவும் ஒருவருக்கொருவர் வெட்டி கொலை செய்யவும் துணிகின்றனர்.. அதன் பிறகு போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படும் அவர்களுக்கு கோர்ட் ஆயுள், தூக்கு தண்டனை என அதிரடி தீர்ப்பு வழங்கி வருகிறது.. அதன்படி கிருஷ்ணகிரி ஓசூர் அருகில் உள்ள தேவசானப்பள்ளி கிராமத்தில் வெங்கடசாமி(55) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே கிராமத்தில் சேர்ந்த ராஜப்பாவும் அவருடைய தம்பி கோவிந்தன் ஆகியோருக்கு இடையே முன்விரதம் இருந்தது. இந்நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி வெங்கடசாமி தனது நிலத்தில் சர்க்கரைவள்ளிக்கிங்கு அறுவடை செய்து கொண்டிருந்தார். அவருடன் மனைவி முனிரத்னா மற்றும் மகன் முருகேசன் ஆகியோர் விவசாய வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த ராஜப்பா, கோவிந்தன் மற்றும் ராஜபாவின் மகன் வெங்கடேசன்(33) உறவினர்கள் நாராயணன், ஆஞ்சி(29) ஆகியவர்கள் வெங்கடசாமி சண்டை போட்டுள்ளனர். அதன் பிறகு அவர்கள் கழுத்தை மாடு கட்டும் கயிற்றால் இறுக்கி கொலை செய்துவிட்டு அனைவரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்கள். இந்த சம்பவம் குறித்து அவருடன் மனைவி முனிரத்னா பாகலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது இந்நிலையில் குற்ற சாட்டப்பட்ட ராஜப்பா வழக்கு நடந்த வந்த நிலையில் இறந்து விட்டார். இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட கோவிந்தன், வெங்கடேசன், நாராயணன், ஆஞ்சி ஆகிய நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனையும் தலா ரூ..20,000 அபதாரம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அபதாரம் செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதித்தும் கூடுதல் மாவட்ட அமர நீதிமன்ற நீதிபதி ரோஸ்லின் துரை உத்தரவிட்டார்.

Categories

Tech |