Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“விவசாயியை தாக்கி மாடுகளை கடத்த முயன்ற 4 பேர்”…. தப்பிக்க முயன்ற போது சுற்றிவளைத்த போலீசார்….!!!!!!

அந்தியூர் அருகே விவசாயியை தாக்கி மாடுகளை கடத்த முயன்ற நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் பெரியார் நகரை சேர்ந்த அத்தப்பன் என்பவர் பெரியேரி பகுதியில் இருக்கும் தோட்டத்தில் விவசாயம் செய்து வருகின்றார். மேலும் அவர் காவலுக்காக நான்கு மாடுகளையும் வளர்த்து வருகின்றார். இவர் தினந்தோறும் தோட்டத்தில் இருக்கும் வீட்டிலேயே படுத்துக் கொள்வது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது நள்ளிரவு 1:30 மணி அளவில் முகமூடி அணிந்து வந்த 4 மர்ம நபர்கள் அத்தப்பனின் கண்ணையும் கால்களையும் கட்டி அருகில் இருக்கும் ஏரி பகுதிக்கு கொண்டு சென்று போட்டார்கள்.

இதை அடுத்து அங்கிருந்து ஓடி வந்த அத்தப்பன் திருடன் திருடன் என கத்திக்கொண்டே வந்தார். ஆனால் மர்ம நபர்கள் அவரை அறிவாள் மற்றும் கைகளால் தாக்கினார்கள். இதில் அவர் மயங்கி விழுந்தார். அப்பொழுது மாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து கத்த ஆரம்பித்தது. இதை கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தார்கள். இதையடுத்து மர்ம நபர்கள் கடத்தலுக்கு கொண்டு வந்த சரக்கு ஆட்டோவை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடினார்கள்.

அந்நேரத்தில் ரோந்து பணியில் இருந்த போலீசார் தப்பிச் சென்ற நான்கு பேரையும் மடக்கி பிடித்தார்கள். பின் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் ரமேஷ், இக்பால், அடைக்கலம், மகேந்திரன் உள்ளிட்டோர் என்பது தெரிய வந்தது. பின் போலீசார் நான்கு பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் வைத்தார்கள். படுகாயம் அடைந்த அத்தப்பன் அங்கிருக்கும் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

Categories

Tech |