Categories
தேனி மாவட்ட செய்திகள்

விவசாயியிடம் லஞ்சம் கேட்ட தாசில்தார்…. அபாரதத்துடன் கூடிய சிறை தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள ஆத்தங்கரைபட்டி கிராமத்தில் விவசாயியான சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய சொத்துக்கு சொத்து மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்காக கடந்த 2011-ம் ஆண்டு தாலுகா அலுவலகத்தில் உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பித்துள்ளார். இதற்கு தாசில்தார் நாகராஜன் ரூபாய் 5000 லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால் சரவணனுக்கு லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத காரணத்தினால் தாசில்தார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதன்பிறகு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சரவணன் இடம் கொடுத்து தாசில்தாரிடம் கொடுக்குமாறு கூறியுள்ளனர். அதன்படி சரவணன் தாசில்தாரிடம் பணத்தை கொடுக்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் நாகராஜன் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நாகராஜனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளார்.

Categories

Tech |