Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் போராட்டம்… பிரேம் டாவின்சி கைவண்ணத்தில்… வைரலாகும் புகைப்படம்..!!

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பிரேம் டாவின்சி கைவண்ணத்தில் புகைப்படம் ஒன்றை வெளியாகி உள்ளது.

‘டெல்லியை நோக்கி செல்வோம்’ என்ற முழக்கத்துடன் விவசாயிகள் பிரம்மாண்டமாக திரண்டுள்ளனர். விவசாய சட்டங்கள் தங்களுக்கு எதிராக உள்ளதாக கூறி கொட்டும் பனியிலும், சாலையில் இருந்து நகராமல் அமர்ந்துள்ளனர். தமிழ் சேனல்கள் இது பற்றி விவாதிக்காமல் ரஜினி பற்றி விவாதங்கள் நடத்துவதாக சமூக ஊடகங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பலர் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறேன் என்று முகப்பு படத்தில் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் பிரேம் டாவின்சி கைவண்ணத்தில் விகடனில் வெளியாகியிருக்கும் விவசாயிகள் போராட்டம் பற்றிய கார்ட்டூன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஏர் கலப்பையை கொண்டு பாராளுமன்றத்தை உழுக்குவது போன்று இந்தப் புகைப்படத்தை சித்தரித்துள்ளனர்.

Categories

Tech |