Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் போராட்டம்… இன்று மத்திய அரசு பேச்சுவார்த்தை…!!!

டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளது.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அனைவரும் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவு பெருகியுள்ளது.

இந்நிலையில் போராட்டத்தால் பொருளாதார பாதிப்பு ஏற்பட்ட நிலையில், விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று நண்பகல் 12 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்துகிறது. இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |