நாட்டில் வேலை சட்டங்கள் அமல்படுத்துவதை உச்சநீதிமன்றம் தடுக்க முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
தற்போது வரை 78 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் விவசாயிகள் போராட்டம் குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம், விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு சரியாக செயல்படவில்லை.வேளாண் திருத்தச் சட்டங்களை நிறுத்தி வைக்க முடியுமா என்று கேட்டது. அதற்கு மத்திய அரசு, மூன்று புதிய வேளாண் சட்டங்கள் அமல்படுத்துவதை உச்சநீதிமன்றம் தடுக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.