Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

விவசாயிகள் பெயரில் மோசடி… கடன்களை ரத்து செய்ய கோரிக்கை… தமிழக வாழ்வுரிமை கட்சி ஆர்ப்பாட்டம்…!!!!

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பழைய காயல் கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், பொதுமக்கள் பெயரில் மோசடியாக பெறப்பட்ட கடன்களை ரத்து செய்ய வலியுறுத்தி ஆட்சியரிடம் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கோரிக்கை மனு கொடுத்தார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தெற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி செயலாளர் மாரிச்செல்வம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதையடுத்து அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனுவை கொடுத்தார்கள். அதில் அவர் கூறியுள்ளதாவது, பழையகாயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சென்ற பத்து வருடங்களாக நடந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் அரசுக்கு நிதி இழப்பு செய்து ஊழலுக்கு துணை போனவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்கள், விவசாயிகள், பொதுமக்கள் பெயரில் மோசடியாக பெறப்பட்டு உள்ள கடன்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்கள்.

Categories

Tech |