Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் பட்டினி போராட்டம்… அரசு செவி சாய்க்குமா?…!!!

வேளாண் சட்டத்தை ரத்து செய்யக் கோரி டெல்லியில் விவசாயிகள் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை.

அதுமட்டுமன்றி மத்திய அரசு விவசாயிகளுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. இருந்தாலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து 1200 டிராக்டர்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லியை நோக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து விவசாயிகள் அனைவரும் இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த அடையாளப் போராட்டம் மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. போராட்டத்தில் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுவரை நடந்த பல கட்ட பேச்சு வார்த்தைகள் எந்த உடன்பாடும் காணாத நிலையில், இந்தப் போராட்டம் அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Categories

Tech |