விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள கே.வி.குப்பம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு தாசில்தார் கீதா தலைமை தாங்க துணை தாசில்தார் சங்கர் வரவேற்றார். மேலும் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, நிறுவன துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தார்கள்.
இக்கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது, மோர் தானா அணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் இடது புற கால்வாய் பகுதிகளில் பாசன கால்வாய்கள் அமைத்து தர வேண்டும். நீர்நிலை உயர ஏறிக் கால்வாய்களை தூர்வாரி ஒழுங்குபடுத்த வேண்டும். தொல்லை கொடுத்து வரும் குரங்குகளை பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்கள்.