தற்போது பண்டிகை காலம் தொடங்கி விட்டதால் அனைத்து நிறுவனங்களும் வங்கிகளும் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. அதன்படி கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சலுகைகளை எச்டிஎஃப்சி வங்கி அறிவித்துள்ளது. இந்த சலுகையை பொது சேவை மையங்கள் உடன் இணைந்து எச்டிஎஃப்சி வங்கி அறிவித்துள்ளது. எச்டிஎஃப்சி கார்டு, கடன், ஈசி EMI என அனைத்திலும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சலுகைகள் வழங்கப்படுகிறது.
தனி நபருக்கு தேவையான பொருள்கள், தொழில் மற்றும் விவசாயத்திற்கு தேவையான பொருட்கள் என அனைத்திற்கும் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் புதிய டிராக்டர் அல்லது வேளாண் உபகரணங்கள் வாங்குவதற்கு விவசாயிகளுக்கு தள்ளுபடி வழங்குகிறது. அதன்படி டிராக்டர் வாங்க 100 சதவீதம் கடன் வழங்குகிறது.
இதர சலுகைகளை பொறுத்தவரையில் 10.25% வட்டிக்கு தனிநபர் கடன், 7.50% வட்டிக்கு கார் கடன் வழங்குகிறது. கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் எச்டிஎஃப்சி வங்கி சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக கிராமப்புற மக்கள், வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர் அனைவரும் பயனடைவார்கள் என்று தெரிவித்துள்ளது.