பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜன திட்டத்தின் கீழ் விவசாயிகள் அனைவருக்கும் ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது. அது 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. ஏற்கனவே 9 தவணைப் பணம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இத்திட்டத்தின் கீழ் 10-வது தவணையாக 20,900 கோடியை பிரதமர் மோடி விடுவித்துள்ளார். அதன்படி 10-ஆவது தவணை ரூபாய் 2000 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. உங்கள் வங்கி கணக்கிற்கு பணம் வந்துள்ளதா என்பதை pmkisan. gov. in என்ற இணையதளத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம்.