Categories
மாநில செய்திகள்

விவசாயிகளே ரெடியா?….பயிர் விளைச்சல் போட்டி…. ரூ.5 லட்சம் பரிசுடன் விருது…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டி நடத்தப்படுகிறது. அந்தப் போட்டியில் கூடுதல் விளைச்சல் பெறும் விவசாயி ஒருவருக்கு ஐந்து லட்சம் மற்றும் 7 ஆயிரம் மதிப்பிலான பதக்கமும் நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறன் விருது என்ற பெயரில் வழங்கப்படுகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள விவசாயிகள் வேளாண்மை துறை அலுவலர்களை அனுகி நுழைவு கட்டணமாக 150 ரூபாய் செலுத்தி தங்களது சாகுபடி நிலவிவரங்கள் சித்தாளங்கள் போன்ற ஆவணங்களை கொடுத்து பதிவு செய்ய வேண்டும்.

இந்தப் போட்டியில் மணிலா மற்றும் உளுந்து பயிரிடும் விவசாயிகளுக்காக நடைபெறுகிறது.மணிலா பயிரில் கூடுதல் மகசூல் பெரும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக 25,000, இரண்டாவது பரிசாக 15,000 வழங்கப்படும்.உளுந்து பயிரில் கூடுதல் மகசூல் பெறும் விவசாயிகளுக்கு முதல் பரிசு 15,000 மற்றும் இரண்டாவது பரிசு பத்தாயிரம் வழங்கப்படும்.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட அளவில் மணிலா பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கான பயிர் விளைச்சல் போட்டியில் கலந்துகொண்டு விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் ஐம்பது ரூபாய் நுழைவு கட்டணம் செலுத்தி பதிவு செய்ய அம்மாவோட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார். மாநில அளவில் நடைபெறும் இந்த போட்டியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள விவசாயிகள் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |