Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே மிஸ் பண்ணிடாதீங்க…! டிராக்டர் வாங்க மானியம்…. மத்திய அரசு நச் அறிவிப்பு…!!!

விவசாயம் என்பது நம் நாட்டின் முதுகெலும்பாகும். விவசாயம் செய்ய எந்திரங்கள் தேவைப்படுகின்றன. அதிலும் குறிப்பாக அறுவடை போன்ற விஷயங்களுக்கு டிராக்டர் மிகவும் அவசியமானதாகும். இந்த விஷயத்தில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் மத்திய அரசு pm-kisan டிராக்டர் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் மானியம் வழங்கிவருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பாதி விலையில் டிராக்டர்கள் கிடைக்கின்றன. மேலும் இந்த நிறுவனத்தின் டிராக்டர்களை பாதி விலைக்கு விவசாயிகள் வாங்க முடியும்.

எஞ்சிய தொகையை மத்திய அரசு மட்டுமல்லாமல், மாநில அரசும் வழங்குகிறது. இதனால் விவசாயிகள் தங்கள் வேளாண் தொழிலின் மூலம் சிறப்பாக நடத்த முடிகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கு 18 வயது முதல் 60 வயது வரையில் இருக்கும் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டு ஒன்றுக்கு ரூ 1.50 லட்சம்  இல்லை அதற்கும் குறைவாக இருக்க வேண்டும்.

ட்ராக்டர்  வாங்குபவரின் பெயரில் சொந்தமாக நிலம் இருக்க வேண்டும். இதில் முக்கியமான நிபந்தனை என்னவென்றால் கடந்த 7 ஆண்டுகளில் இதேபோல் டிராக்டர் எதையும் விவசாயிகள் வாங்கி இருக்க கூடாது. ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே டிராக்டருக்கு மானிய உதவி பெற விண்ணப்பிக்க முடிகிறது முடியும் எனக் கூறியுள்ளது.இதன் காரணமாக விவசாயிகள் அனைவரிடமும்  இத்திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Categories

Tech |