Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே!…. பி.எம் கிசான் 11வது தவணைத்தொகை ரூ.2000….. மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

இந்தியாவிலுள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு உதவும் அடிப்படையில் பிரதமரின் விவசாயிகள் நிதி உதவித்திட்டம் 2019 ஆம் வருடம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் அடிப்படையில் 4 மாதங்களுக்கு ஒருமுறை 2,000 ரூபாய் என வருடத்துக்கு 6 ஆயிரம் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. நாடு முழுதும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகள் மத்திய மோடி அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதிதிட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் ஆதார் அடிப்படையிலான ஒடிபி முறைக்கு உழவர் இ-கேஒய்சி விருப்பத்தைக் கிளிக்செய்ய இதை அப்டேட் செய்யலாம். இந்த திட்டத்தில் விவசாயிகள் தவணைத்தொகையை பெற eKYC அப்டேட்டை செய்யவில்லையெனில் அடுத்த தவணை தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்று கூறப்பட்டது.

இதில் eKYC செயல்முறைக்கு வரும் 31 ஆம் தேதி இறுதி காலக்கெடுவாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. எனினும் இப்போது மகிழ்ச்சியான செய்தியாக இந்த eKYC செயல்முறை முடிப்பதற்கான காலகெடு மே 22, 2022 வரை நீடிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இத்திட்டத்தின் கீழ் இதுவரையில் 10 தவணைகள் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், 11வது தவணைக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர். இதற்கிடையில் பலபேர் இன்னும் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யாமல் இருக்கின்றனர். ஆகவே eKYC செயல்முறையை இதுவரை முடிக்காதவர்களுக்கும் 11 வது தவணை தொகை கிடைக்க இருக்கிறது. இருந்தாலும் eKYC செயல்முறையை முடிப்பது கட்டாயமாகும்.

# PM கிசானின்  https://pmkisan.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.

# முகப்புப்பக்கத்தில், வலது புறம் உள்ள eKYC விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.

# உங்கள் ஆதார் அட்டைஎண், கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு தேடலை கிளிக் செய்யவும்

# உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள உங்களது மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும்.

# பின் உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP ஐ உள்ளிட வேண்டும். eKYC சரியாக முடிக்க உங்களது அனைத்து விபரங்களும் பொருந்த வேண்டும். இல்லையென்றால் உள்ளூர் ஆதார் சேவை மையத்துக்கு செல்லவும்.

உங்கள் கணக்கு செயலில் உள்ளதா என்பதை தெரிந்துக் கொள்வது எவ்வாறு..?

# முதலாவதாக PM Kisan-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://pmkisan.gov.in/க்குச் செல்ல வேண்டும். வலது புறத்தில் ‘ஃபார்மர்ஸ் கார்னர்” எனும் ஆப்ஷனைப் பெறுவீர்கள்

# அதன்பின் பயனாளி நிலை என்ற விருப்பத்தினை கிளிக் செய்ய வேண்டும். இங்கே ஒருபுதிய பக்கம் திறக்கும். அந்த புதிய பக்கத்தில் ஆதார் எண் (அல்லது) வங்கி கணக்கு எண் என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

# இந்த எண்கள் வாயிலாக உங்களது கணக்கில் பணம் வந்துள்ளதா இல்லையா என்பதை சரிபார்க்க வேண்டும்.

# நீங்கள் தேர்வு செய்த விருப்பத்தின்எண்ணை உள்ளிட்டு பின், Get Data என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

# இங்கே கிளிக்செய்த பின்னர் அனைத்து பரிவர்த்தனை தகவல்களையும் பெறுவீர்கள். அந்த வகையில் உங்களது கணக்கில் தவணை எப்போது வந்தது, எந்த வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

# 11-வது தவணை குறித்த தகவல்களையும் இங்கே பெறமுடியும். FTO உருவாக்கப்பட்டுள்ளது மற்றும் கட்டண உறுதிப்படுத்தல் நிலுவையில் இருக்கிறது’ என நீங்கள் பார்த்தால், நிதி பரிமாற்ற செயல்முறை தொடங்கிவிட்டது என்று அர்த்தம் ஆகும். இந்த தவணை சில தினங்களில் உங்களது கணக்குக்கு மாற்றப்படும்.

Categories

Tech |