விவசாயிகள் அனைவரும் தங்கள் பிரச்சனைகளை அடையாளப்படுத்திய அரசிடம் தெரிவிக்கும்படி மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளை தடுக்க போலீசார் வன்முறையில் இறங்கினர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடந்த போராட்டத்தில் விவசாயிகளை தடுக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்கினர். அதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. இந்நிலையில் டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் சங்கத்துடன் நேற்று விக்யான் பவனில் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் பேச்சு வார்த்தை நடத்தினார்.
ஆனால் அதில் பெரும்பாலான விவசாயிகள் பங்கேற்காததால் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாமல் முடிந்தது. இந்நிலையில் நாளை அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதால், இன்றைக்குள் விவசாயிகள் தங்கள் பிரச்சனைகளை அடையாளப்படுத்தி தெரிவிக்கும்படி மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்க உறுதி பூண்டுள்ளதாகவும் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.