Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…! எல்லாரும் வாங்க…. நாளைக்கு பேசுவோம்…. மத்திய அரசு அழைப்பு ….!!

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை, மத்திய அரசு நாளை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. இன்று பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகள் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், மத்திய அரசு தேதியை மாற்றியுள்ளது.

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, டெல்லியில் 34-வது நாளாக லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசுடனான பல கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததால், போராட்டம் நீடிக்‍கிறது. கடும் குளிர், உடல்நலக் குறைவு காரணமாகவும், தற்கொலை செய்தும் சுமார் 40 விவசாயிகள் போராட்டக்களத்தில் உயிரிழந்துள்ளனர். ஆனால் இதுவரை வேளாண் சட்டங்களை திரும்பப்பெற மத்திய அரசு முன்வரவில்லை.

இந்நிலையில், அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு விவசாயிகளை அழைத்த மத்திய அரசு, பேச்சுவார்த்தை நடைபெறும் தேதியை விவசாய சங்கங்களே முடிவு செய்யலாம் என அறிவித்தது. அதன்படி 29-ம் தேதியான இன்று பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக விவசாய சங்க பிரதிநிதிகள் அறிவித்திருந்தனர். இதையடுத்து, இன்று பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை பேச்சுவார்த்தைக்கு வரும்படி விவசாயிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. விவசாயிகளை அலைக்கழிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுவதாக, விவசாய சங்கங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன.

Categories

Tech |