Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…. உடனே இதை பண்ணுங்க…. இல்லனா சல்லி பைசா கூட கிடைக்காது…. மத்திய அரசு எச்சரிக்கை அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக வழங்கப்படுகிறது.இந்த பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது.இந்த திட்டத்தில் இதுவரை 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் பன்னிரண்டாவது தவணை பணம் அக்டோபர் மாதம் இறுதிக்குள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருந்தாலும் இ கேஒய்சி அப்டேட்டை இன்னும் முடிக்காத விவசாயிகளுக்கு இந்த திட்டத்தின் 12 ஆவது தவணையில் பலன் கிடைக்காது என அரசு தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட விவசாயிகள் இந்தத் திட்டத்தின் பலனை பெறுவதற்கு இ கேஒய்சி சரி பார்ப்பை முடிக்க வேண்டும்.இந்தத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஓடிபி அடிப்படையிலான இ கேஒய்சி அப்டேட்டை விரைவில் முடிக்க வேண்டும். இதனை அருகில் உள்ள பொது சேவை மையத்தில் முடித்து விடலாம்.

e-KYC எப்படி முடிப்பது?

*  e-KYC ஐ முடிக்க முதலில் pmkisan.gov.in இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

* அங்கே ஃபார்மர்ஸ் கார்னர் ஆப்சனில்  E-KYC டேப்பில் கிளிக் செய்து, ஆதார் எண்ணை உள்ளிட்டு, சர்ச் பட்டனை கிளிக் செய்யவும்.
* பின்னர் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.
* அந்த OTP நம்பரை பதிவிட்டால் போதும். இ-கேஒய்சி அப்டேட் செய்யப்பட்டுவிடும்.

Categories

Tech |