Categories
மாநில செய்திகள்

தமிழகமே எதிர்பார்ப்பில்!… இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல்…. என்னென்ன அறிவிப்புகள்?…..!!!!

2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். நேற்று பேரவை தொடங்கி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை வாசிக்க துவங்கிய உடனே, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டது, எஸ்.பி வேலுமணி வீட்டில் ரெய்டு நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். அப்போது கூச்சல் காரணமாக அமைதியாக இருக்கும்படி சபாநாயகர் அறிவுறுத்திய போதிலும் அதிமுகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். பட்ஜெட் உரைக்கு முன்பு பேச வாய்ப்பு கொடுக்காததால் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்திற்குப் பின் வருகிற 24 ஆம் தேதி வரை பேரவையை நடத்த முடிவு செய்யப்பட்டது. அந்த கடைசி நாளான 24 ஆம் தேதி பட்ஜெட் மீதான விவாதத்திற்கு தமிழக முதல்வர் பதிலுரை ஆற்றுவார். ஆனால் 24 ஆம் தேதி கேள்வி பதில் கிடையாது. பிற நாட்களில் கேள்வி பதில் இருக்கும் அவை நேரலையாக ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று(மார்ச்19) நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அதன்படி வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று காலை 10 மணிக்கு வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருகிறார். இன்று தாக்கல் செய்யப்படவுள்ள தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கையில் புதிய உழவர் சந்தைகள், இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம், பாரம்பரிய ரகங்கள் சாகுபடிக்கு முக்கியத்துவம், பயிர்க்கடன் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |