நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் அனைவரும் பயனடையும் நோக்கத்தில் பி எம் கிசான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக 2000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இதுவரை 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. சுமார் எட்டு புள்ளி 42 கோடி விவசாயிகளுக்கு அரசு நேரடியாக பணத்தை வழங்கியுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் தகுதி உள்ள விவசாயிகள் மட்டுமே பயனடைய முடியும். தற்போது விவசாயிகள் அனைவரும் பிஎம் கிசான் சம்மன் நிதியின் 13 வது தவணைக்காக காத்திருக்கின்றனர். 13வது தவணையாக 2000 ரூபாயை மத்திய அரசு வருகின்ற ஜனவரி மாதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.