தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் கூட விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் இலவச மின்சாரத்திற்கு விண்ணப்பித்த விவசாயிகளுக்கு விரைவில் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்றும், மின் இணைப்பில் சந்தேகம் இருந்தால் மின்வாரியத்தில் புகார் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.