Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு ரூ.15 லட்சம் கடனுதவி…. மத்திய அரசின் சூப்பர் திட்டம்…. நீங்களும் பயன்பெற உடனே இதை பண்ணுங்க….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு உதவும் விதமாக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் பிஎம் கிசான் திட்டம். இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதி உதவி மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது. அதனைப் போலவே விவசாய தொழிலை மேம்படுத்திக் கொள்ள உதவும் வகையில் பி எம் கிசான் FPO யோஜனா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் இந்திய குடிமகனாக உள்ள சொந்த நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு வங்கி கணக்கில் 15 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும். இதன் மூலம் விவசாயிகள் உரங்கள்,பூச்சிக்கொல்லிகள் மற்றும் விவசாய இயந்திரங்கள் போன்றவற்றை வாங்கிக் கொள்ள முடியும். இதற்காக விவசாய சங்கத்தில் உறுப்பினராக பதிவு செய்யப்பட்டுள்ள விவசாயிகள் குழுவில் கட்டாயம் இருக்க வேண்டும்.

இந்த குழுவில் 11 பேர் உறுப்பினராக இருக்க வேண்டும் என்பது அவசியம். இந்த தொகையை பெறுவதற்கு விவசாயிகளின் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, முகவரி சான்று, வருமானச் சான்று, நில ஆவணங்கள், வங்கி பாஸ்புக் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய அனைத்தும் சமர்ப்பிக்க வேண்டும். இந்த திட்டத்தில் இணைந்து பயன் பெறுவதற்கு விவசாயிகள் www.enam.gov.inஎன்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேவையான ஆவணங்களுடன் பதிவு செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |