இந்தியாவில் வேளாண் சட்டத்தை ரத்து செய்யாவிட்டால் அது விவசாயிகளுக்கு செய்யும் துரோகம் என்று ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. அந்த விவசாயிகள் அனைவருக்கும் நாடு முழுவதிலும் ஆதரவு கிடைத்துள்ளது. இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மற்றும் ஹரியானா உள்ளிட்ட 6 மாநில விவசாயிகள் டெல்லி எல்லைகளில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அந்தப் போராட்டம் இன்றுடன் எட்டாவது நாளை எட்டியுள்ள நிலையில், அரசு நான்காம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இது பற்றி ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் அது விவசாயிகளுக்கும் இந்தியாவிற்கும் செய்யும் துரோகம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.