விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசே பி எம் கே சாங் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அது மட்டுமல்லாமல் விவசாயம் செய்வதற்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் திட்டங்களும் உள்ளன. இந்நிலையில் குறைந்த வட்டியில் குறுகிய கால கடன் வழங்கும் சிறப்பு திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 2022 முதல் 2025 ஆம் ஆண்டு வரை 34 ஆயிரத்து 856 கோடி கூடுதல் பட்ஜெட் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது.
மூன்று லட்சம் வரையில் விவசாயிகளுக்கு குறுகிய கால கடன் வழங்கும் அனைத்து வகையான நிதி நிறுவனங்களுக்கும் வருடத்திற்கு 1.5 சதவீதம் வட்டி மானியம் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. விவசாயிகளுக்கு மூன்று லட்சம் குறுகிய கால கடன் உதவி வழங்கும் அனைத்து வங்கிகளுக்கும் வட்டி மானியம் வழங்கப்படும்.
குறுகிய கால வேளாண் கடன் என்பது கால்நடை பராமரிப்பு, பால்வளம்,கோழி வளர்ப்பு மற்றும் மீன் வளர்ப்பு உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளுக்கும் கிடைக்கும். இதனால் நாட்டில் வேலை வாய்ப்பு உருவாகவும் வழி வகுக்கவும் முடியும். ஆனால் உரிய காலத்தில் கடனை சரியாக திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு வருடத்திற்கு நான்கு சதவீத வட்டி விகிதத்தில் குறுகிய கால கடன் வழங்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.