Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு….. அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்…!!!!

மீட்டர் பொறுத்தப்பட்டாலும் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு தொடரும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழக அரசு விவசாயிகளுடைய நலனில் தொடர்ந்து அக்கறை காட்டி வருகிறது. தமிழக அரசு கடந்த 20 வருடங்களாக மின்னிணைப்புக்காக காத்திருந்த 4.52 லட்சம் விவசாயிகளுக்கு ஒரே வருடத்தில் ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்க உத்தரவிட்டது. தற்போது அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விவசாயிகளுக்கு மீட்டர் பொருத்த பட்டாலும் அவர்களுக்கு தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கூறியிருக்கிறார்.

விவசாய மின் இணைப்புகளில் மீட்டர் பொருத்தி விட்டு இப்போது விவசாயிகளிடையே பயத்தையும், மாய தோற்றத்தையும் கொண்டுவர வேண்டாம். கடந்த 2017 ஆம் வருடத்திலேயே விவசாயிகளுக்கு மீட்டர் பொருத்துவது ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இப்போதுதான் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது போல ஓபிஎஸ் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். எனவே அவர்கள் கடந்த ஆட்சியில் என்ன செய்தார்கள் என்பதை தெரிந்துகொண்டு அறிக்கை வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |