நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்காக மத்திய அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி பிரதான் மந்திரி கிஷான் டிராக்டர் யோஜனா திட்டம் ஏழை விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்குவதற்காக மானிய உதவி வழங்குகின்றது. இந்த திட்டத்தின் மூலமாக டிராக்டர் வாங்கும் விவசாயிகளுக்கு பாதி மானியத்தை அரசு வழங்குகிறது. இந்த திட்டத்தில் 18 வயது முதல் 60 வயது வரையிலான விவசாயிகள் அனைவரும் விண்ணப்பித்து பயன்பெற முடியும். இதில் விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் வருடத்திற்கு 1.5 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். அதே சமயம் டிராக்டர் வாங்குபவரின் பெயரில் சொந்த நிலமும் இருக்க வேண்டும்.
இதில் மானியம் பெறும் விவசாயிகள் வேறு மானியத் திட்டங்கள் எதிலும் உதவி பெறக்கூடாது. அது மட்டுமல்லாமல் கடந்த ஏழு வருடங்களில் விண்ணப்பதாரர் எந்த டிராக்டரும் வாங்கி இருக்கக் கூடாது. இதில் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். எண்ணத்தில் விண்ணப்பிப்பதற்கு அருகில் உள்ள இ சேவை மையங்களில் பதிவு செய்யலாம் என அரசு அறிவித்துள்ளது.