Categories
மாநில செய்திகள்

விவசாயிகளின் வயிற்றில் பாலை வார்த்த அமைச்சரின் அறிவிப்பு…!!!

காவிரி டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று முதல் நேரடி கொள்முதல் நிலையங்கள் மீண்டும் திறக்கப்படுமென அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் கேரளாவில் பெய்த கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள அணைகள் நிரம்பின. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியாக சம்பா சாகுபடியை தொடங்கினர். தற்போது அறுவடை காலம் தொடங்கியுள்ளதால் நெல் கொள்முதலுக்கான நல்ல தீர்வுக்கு அரசின் கருணைப் பார்வையை எதிர்பார்த்திருந்தனர் விவசாயிகள். எனவே நெல் கொள்முதல் செய்வதில் உள்ள பிரச்சனைகளுக்கு அரசு உரிய தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.தற்பொழுது காவிரி டெல்டா உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் அரசு சார்பில் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்ற அமைச்சர்  காமராஜ்  அறிவித்துள்ளார்.இந்த அறிவிப்பு விவசாயிகள் மனதில் மகிழ்ச்சி வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு மாநில குடிமைப் பொருள் வழங்கு துறையின் கீழ் கொள்முதல் நிலையத்தின் கீழ் தமிழகத்தில் மொத்தம் 1300 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தற்பொழுது செயல்பாட்டில் உள்ளன.இதன்மூலம் விவசாயிகளுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு டோக்கன் எண் வரிசைப்படி நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.தமிழக அரசின் அறிவிப்பை தொடர்ந்து டோக்கன்களுக்காக விவசாயிகள் தற்பொழுது காத்திருக்கின்றனர்.

Categories

Tech |