திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூரில் விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காக சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள மத்திய புகையிலை ஆராய்ச்சி நிலையம் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தில் விவசாய மண்ணுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதற்கு மத்திய புகையிலை ஆராய்ச்சி நிலையம் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக தலைவர் பொன்.மணிவேல் தலைமை தாங்கினார். அந்த பூஜையில் தொழில்நுட்ப பண்ணை மேலாளர் ராஜேந்திரன் வரவேற்றார்.
மேலும் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்து இந்த பூஜையில் கலந்து கொண்ட விவசாயிகள் தங்களுடைய நிலங்களில் இருந்து எடுத்து வரப்பட்ட மண்ணை விவசாயம் செழிக்க வேண்டும் என்று கலசத்தில் வைத்து சிறப்பு பூஜையும் நடத்தினர். இதையடுத்து ரசாயன உரம், பூச்சிமருந்து ஆகியவற்றுக்கு மாற்றாக ஜீவாம்ருதம், பஞ்சகவ்யம் ஆகிவற்றை பயன்படுத்துவேன் என்றும், இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களை பயன்படுத்த முயற்சி செய்வேன் என்றும் விவசாயிகள் உறுதிமொழி ஏற்றனர்.