Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

நாங்க எப்படி அதை செய்யுறது…. இதெல்லாம் ரொம்ப அதிகம்…. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்…!!

திருவாரூர் மாவட்டத்தில் மத்திய அரசு உரம் விலையை உயர்த்தியதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கம் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு உரம் விலையை உயர்த்தி உள்ளதால் நாடு முழுவதும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள பழைய பஸ் நிலையம் அருகே தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது.

அந்தப் போராட்டத்தில் ஒன்றிய தலைவர் ஜெயபால் தலைமை தாங்கியுள்ளார். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயற்குழு உறுப்பினர், நகர செயலாளர் பாலசுப்ரமணியன் மற்றும் மாணவர் சங்க மாவட்ட செயலாளர்  உட்பட பலர் கலந்து கொண்டு உரம் விலையை வாபஸ் பெறக் கோரி கோஷமிட்டுள்ளனர்.

Categories

Tech |