Categories
மாவட்ட செய்திகள்

விழுப்புரத்தில் வெடி வைத்து தகர்க்கப்பட்ட தளவானூர் அணைக்கட்டு பகுதியை கலெக்டர் ஆய்வு செய்தார்….!!

தளவானூர் அணைக்கட்டு பகுதியில் வெடிவைத்து தகர்க்கப்பட்ட இடங்களை மாவட்ட கலெக்டர் டி.மோகன் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம் தளவானூர் பகுதியில் உள்ள தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணைக்கட்டு உடைந்து சேதமடைந்ததால் அதில் கட்டப்பட்டிருந்த மூன்று மதகுகளும் வெடிவைத்து தகர்க்கப்பட்டன. இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் டி.மோகன் அவர்கள் வெடிவைத்து தகர்க்க பகுதிகளில் நேற்று ஆய்வு செய்தார்.தொடர்ந்து பேசிய அவர் வெடிவைத்து தகர்க்கப்பட்ட பகுதிகளைச் சுற்றியுள்ள இடங்களில் அரிப்புகள் ஏற்படாத வண்ணம் மணல், கட்டைகள் மற்றும் மணல் மூடைகளை கொண்டு பல படுத்தும்படி பொதுப்பணித் துறையினருக்கு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் அத்தியூர்திருவாதி செல்லும் வழியில் உள்ள மேம்பாலம் சேதமடைந்து காணப்படுவதால் அது இடிந்து விழாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் எம் ஜி சாலை பாகர்ஷா வீதிகளில் தேங்கியுள்ள மழை நீரை பாதாள சாக்கடை வழியாக வெளியேற்ற அவர் பொதுப்பணித்துறையினருக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து உடனடியாக பொதுப்பணித்துறையினர் பாதாள சாக்கடை வழியாக வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த ஆய்வின்போது தாசில்தார் ஆனந்த் குமார் செயற்பொறியாளர் ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Categories

Tech |